top of page

இந்தி பேசிய இளம்பெண்ணிடம் கூடுதல் கட்டணம் கேட்ட ஆட்டோ டிரைவர்

  • கன்னடம் பேசும் பெண்ணை சவாரிக்கு ஏற்றி செல்வது போன்று காட்சிகள் உள்ளன.

  • வைரலான இந்த வீடியோ 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.

Hindi Social Media
Hindi Social Media
  • பெங்களூருவில் ஆட்டோ டிரைவர்களின் செயல்கள் குறித்து சமூக வலைதளங்களில் அடிக்கடி வீடியோக்கள் வெளியாவது உண்டு. அது போன்று ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதில், பெங்களூருவில் 2 பெண்கள் தனித்தனியாக ஆட்டோ சவாரிக்காக ஏற முயற்சிக்கிறார்கள்.

  • அதில் ஒரு பெண் இந்தி பேசுகிறார். மற்றொருவர் கன்னடம் பேசுகிறார். இந்தி பேசும் பெண்ணிடம் குறிப்பிட்ட தூரத்திற்கு ஆட்டோ டிரைவர் ரூ.300 கட்டணம் கேட்கிறார். ஆனால் கன்னடம் பேசும் பெண்ணிடம் அதே தூரத்திற்கு ரூ.200 மட்டும் கேட்கிறார். இதே போல ஒரு ஆட்டோ டிரைவரை இந்தி பேசும் பெண் அணுகிய போது, டிரைவர் அவரை அலட்சியப்படுத்துகிறார். ஆனால் கன்னடம் பேசும் பெண்ணை சவாரிக்கு ஏற்றி செல்வது போன்று காட்சிகள் உள்ளன.

  • வைரலான இந்த வீடியோ 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. ஒரு பயனர், நீங்கள் ஐதராபாத் வாருங்கள். இங்கு யாரும் எந்த மொழியையும் கற்பதற்காக உங்களை வற்புறுத்த மாட்டார்கள். ஆட்டோ டிரைவர்கள் அவர்கள் வேலையை செய்வார்கள் என பதிவிட்டுள்ளார். மற்றொருவர், நாம் அனைவரும் முதலில் இந்தியர்கள். ஒவ்வொரு மொழியையும் மதிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். இதே போன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட இந்த வீடியோ விவாதத்தை தூண்டியது.

    #Hindi #Social Media


Comments


bottom of page