top of page

எண்ணூர் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அப்பட்டமான விதிமீறல்- ஜி.சுந்தர்ராஜன்

  • எண்ணூர் பகுதியில் மீண்டும் ஒரு அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்.

  • அனல் மின் நிலைய விரிவாக்கம் திட்டம் தொடர்பாக தங்களது ஆதரவு கருத்துகளையும் எதிர்ப்பு கருத்துகளையும் தெரிவித்தனர்.

Ennore    Public opinion    Meeting
Ennore Public opinion Meeting
  • வடசென்னை எண்ணூர் பகுதியில் மீண்டும் ஒரு அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் முன்வைக்கப்படுவது தொடர்பானக் கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு சென்னை எர்ணாவூர் மகாலட்சுமி நகரில், பெருந்தலைவர் காமராஜர் மாளிகையில் நடைபெற்றது.

  • இந்த கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில் நடைபெற்றது. இதில், சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர், மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் தி.மு.தனியரசு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • கூட்டத்தில், அனல் மின் நிலைய விரிவாக்கம் திட்டம் தொடர்பாக தங்களது ஆதரவு கருத்துகளையும் எதிர்ப்பு கருத்துகளையும் தெரிவித்தனர்.

  • அப்போது, கூட்டத்தில் பேசிய சீமான், "சமீப காலமாக நடத்தப்படும் கருத்து கேட்பு கூட்டங்களில் நியாயமாக கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு அளிப்பதில்லை. இக்கருத்து கேட்பு கூட்டத்திலும் ஆளுங்கட்சியினர் மட்டுமே இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இது குறித்து மக்களிடம் வீடு வீடாகச் சென்று கருத்துகளை பெறவேண்டும்" என்றார்.

  • மேலும் அவர், "சுற்றுச்சூழலை பாதுகாக்க எண்ணூர் அனல் மின் நிலையம் அமைப்பதை தடுக்க வேண்டும். இதற்காக தொடர்ந்து போராடுவோம்" என்றார் அவர். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சீமான் வெளியேற வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தினர்.

  • இந்நிலையில், கருத்து கேட்பு கூட்டம் குறித்து சூழலியல் ஆர்வலரும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்தவருமான ஜி.சுந்தர்ராஜன் தனது எக்ஸ தளப்பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

  • இந்த பதிவில் அவர் கூறுகையில், "பொதுமக்களை கட்சியினர் மிரட்டியது, பாதி கூட்டத்திற்கு தி.மு.க. எல்.எல்.ஏ.வே தலைமை தாங்கி நடத்தியது, உரிய பாதுகாப்பு வழங்காத காவல்துறை, கூட்டத்தை சட்டப்படி முடிக்காமல் மாவட்ட ஆட்சியர் வெளியேறியது என எண்ணூர் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அப்பட்டமான விதிமீறலாக நடந்துள்ளது" என்றார்.


Comments


bottom of page