top of page

ஐ.நா. அமைதிப் படையை 'வங்க தேசத்துக்கு' அனுப்ப வேண்டும் மோடி நேரடியாக தலையிட மம்தா வலியுறுத்தல்

  • மேற்குவங்க சட்டமன்றத்தில் மம்தா உரையாற்றினார்

  • எங்களுக்கு வங்கதேசத்தில் குடும்பங்கள், அன்புக்குரியவர்கள் உள்ளனர்.

West Bengal Mamata Banerjee
West Bengal Mamata Banerjee
  • வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்க்கப்பட்டதிலிருந்து சிறுபான்மையினரான இந்துக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவறை 200க்கும் மேற்பட்ட கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்கான் அமைப்பின் இந்து மதத் துறவிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

  • இந்நிலையில் வங்கதேசத்துக்கு ஐநாவின் அமைதி காக்கும் படையை அனுப்பி வைக்க [பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

  • மேற்குவங்க சட்டமன்றத்தில் உரையாற்றிய மம்தா, எங்களுக்கு வங்கதேசத்தில் குடும்பங்கள், அன்புக்குரியவர்கள் உள்ளனர். இதில் இந்திய அரசு எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் உலகில் எங்கும் மத அடிப்படையில் நடக்கும் அட்டூழியங்களை நாங்கள் கண்டிக்கிறோம்.

  • வங்கதேசத்தில் இந்தியர்கள் தாக்கப்பட்டால், அதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. நமது மக்களை நாம் மீட்டெடுக்க முடியும். இந்திய அரசு இந்த விஷயத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.ஐநா அமைதி காக்கும் படையை அனுப்பி வைக்க ஆவன செய்ய பிரதமர் இதில் தலையிட வேண்டும் என்று தனது உரையில் தெரிவித்துள்ளார். வங்கதேச மக்கள் தொகையில் 22 சதவீதம் பேர் இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    #West Bengal #Mamata Banerjee


Comments


bottom of page