குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் உலா வரும் காட்டுப்பன்றிகள்- பொதுமக்கள் அச்சம்
- tamil public
- Dec 12, 2024
- 1 min read
சாலைகளில் காட்டு பன்றி ஒன்று தனது குட்டியுடன் உலா வந்தது.
குடியிருப்பு பகுதியை ஒட்டி வனப்பகுதி உள்ளது.

Public Wild boars அரூர்:
தருமபுரி மாவட்டம், அரூர் நகர பகுதியிலான திருவிக நகர், கோவிந்தசாமி நகர் ஆகிய குடியிருப்பு பகுதியை ஒட்டி வனப்பகுதி உள்ளது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து சாலைகளில் குட்டிகளுடன் உலா வந்த வண்ணம் உள்ளன.
அதனை தொடர்ந்து நேற்று இரவும் திருவிக நகர், கோவிந்தசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் காட்டு பன்றி ஒன்று தனது குட்டியுடன் உலா வந்தது.
அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் வாகனத்தை இயக்கி சென்றனர். எனவே ஊருக்குள் வனவிலங்குகள் வராமல் இருக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Public #Wild boars #Tamilpublicnews






Comments