கிருஷ்ணகிரி அருகே ஏரி நீர் ஊருக்குள் புகுந்ததால் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- tamil public
- Dec 13, 2024
- 1 min read
ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் ஒட்டியவாறு பழைய கோட்டை ஏரி அமைந்துள்ளது.
புயல் தாக்கத்தில் நிரம்பிய நிலையில் மதகுகள் திறக்க முயன்ற பொழுது மதகுகள் திறக்க முடியாத நிலை உள்ளது.

சிங்காரப்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் ஒட்டியவாறு பழைய கோட்டை ஏரி அமைந்துள்ளது.
74 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரியில் 2 மதகுகள் உள்ள நிலையில் இந்த ஏரி கடந்த ஃபெஞ்சல் புயல் தாக்கத்திலே நிரம்பிய நிலையில் மதகுகள் திறக்க முயன்ற பொழுது மதகுகள் திறக்க முடியாத நிலை உள்ளது.
இதனால் நீர் சரியான முறையில் வெளியேறாமல் நீர் பிடிப்பு பகுதியாக உள்ள பகுதியை தாண்டி அருகில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் வீடுகளில் நீர் சூழ்ந்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏரியின் மதகு திறப்பதற்கான வழிவகைகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
#Krishnagiri #Village people






Comments