செம்பரம்பாக்கம் நீர்மட்டம் உயர்வு
- tamil public
- Dec 12, 2024
- 1 min read
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து 713 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 3,977 கனஅடியாக அதிகரித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தென்தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வலுவிழக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து 3,977 கனஅடியாக அதிகரித்த நிலையில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து 713 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 3,977 கனஅடியாக அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 80 சதவீதம் நிறைந்ததால் அதிகளவு உபரிநீர் திறக்கப்படுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
#Northeast Monsoon #Rain #Chembarambakkam Lake






Comments