தனியார் மருத்துவமனை தீ விபத்து - 7 பேர் உயிரிழப்புக்கு இ.பி.எஸ். இரங்கல்
- tamil public
- Dec 13, 2024
- 1 min read
நேற்றைய தினம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்

திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் நேற்றைய தினம் [டிசம்பர் 12] ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
இது மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
தீ விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள அனைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, அவர்கள் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரித்துள்ளார்.
#Private hospital #Fire #EPS #Condolenees






Comments