பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறப்பு
- tamil public
- Dec 12, 2024
- 1 min read
கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் உள்ள கரையோர தாழ்வான கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏரிக்கான நீர்வரத்து விநாடிக்கு 3500 கனஅடியாக உள்ளது.

கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் உள்ள கரையோர தாழ்வான கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆட்ராம்பாக்கம், ஒத்தப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
ஏரிக்கான நீர்வரத்து விநாடிக்கு 3500 கனஅடியாக உள்ளது. நீர் வரத்தை பொறுத்து நீர் திறப்பு அளவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
#Northeast Monsoon #Rain #Poondi Lake






Comments