புத்தாண்டை வரவேற்க சாக்லெட்டில் பிரமாண்ட 'கிங்காங்' சிலை
- tamil public
- Dec 20, 2024
- 1 min read
சிலையை செய்ய 2 வாரங்கள் ஆனதாக அதனை உருவாக்கிய ’செப்’ தெரிவித்துள்ளார்.
சாக்லெட் சிலையுடன் நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:
புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள தனியார் பேக்கரியில் ஆண்டுதோறும் புத்தாண்டை வரவேற்று பிரமாண்ட அளவில் முக்கிய பிரமுகர்களின் சிலைகள் சாக்லெட் மூலம் தயாரிக்கப்படும்.
அதேபோல் இந்த ஆண்டும் புத்தாண்டையொட்டி சாக்லெட்டால் பிரமாண்டமான 'கிங்காங்' உருவ சிலையை வடிவமைத்து வைத்துள்ளனர். இந்த சிலை 7 அடி 2 அங்குலம் உயரம் கொண்டதாக உள்ளது.
இதற்காக 800 கிலோ சாக்லெட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிலையை செய்ய 2 வாரங்கள் ஆனதாக அதனை உருவாக்கிய 'செப்' தெரிவித்துள்ளார்.
இந்த சாக்லெட் சிலையுடன் நின்று சுற்றுலா பயணிகள், குழந்தைகள் செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.






Comments