மாமல்லபுரம் சிற்பக்கல்லூரியில் நடைபெற்ற `பூம்புகார்' கைத்திறன் போட்டி
- tamil public
- Dec 16, 2024
- 1 min read
கைவினைக் கலைஞர்கள் கைத்திறன் போட்டியை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
வெற்றி பெரும் மாணவ, மாணவியருக்கு, தலா 2,000 ரூபாய் ரொக்க பரிசு.

மாமல்லபுரம்:
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் பூம்புகார் நிறுவனமானது, மாமல்லபுரம் அரசு கட்டிட, சிற்பக்கலைக் கல்லுாரி மாணவர்களிடம், அடுத்த தலைமுறை கைவினைக் கலைஞர்கள் கைத்திறன் போட்டியை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெரும் மாணவ, மாணவியருக்கு, தலா 2,000 ரூபாய் ரொக்க பரிசு மற்றும் வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் ஆகியவை வழங்குவது வழக்கம்.
2023-2024-ம் ஆண்டிற்கான போட்டியாக ஓவியம், கற்சிற்பம், மரச்சிற்பம், சுதைச்சிற்பம், உலோக சிற்பம் ஆகிய பிரிவுகளில், 40 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில் 25 பேர் கலைத் திறனாளியாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் ராமன், பூம்புகார் நிறுவன மாமல்லபுரம் மேலாளர் வேலு ஆகியோர் போட்டிகளின் செயல்பாட்டை கண்காணித்தனர்.\
#Mamallapuram #College of sculpture #Handicraft competition #Tamilpublicnews






Comments