ரெயில் பயணிகளுக்கு நற்செய்தி கேஷ்பேக் சலுகை அறிவிப்பு
- tamil public
- Dec 21, 2024
- 1 min read
R-Wallet ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்ட சலுகை, இப்போது டிக்கெட் எடுக்கும்போது வழங்கப்படுகிறது.
டிக்கெட் வாங்குவோரை ஊக்குவிக்கும் விதமாக சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

R-Wallet என்பது UTS (முன்பதிவில்லா டிக்கெட் எடுக்கும் முறை) மொபைல் பயன்பாட்டில் உள்ள வாலட் அம்சமாகும்.
இது இந்திய ரெயில்வே பயணிகளுக்கு முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வாங்கவும், தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்களில் பணம் செலுத்தவும் வசதி செய்து தரப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ரெயில் பயணிகள் R-Wallet பயன்படுத்தி UTS மொபைல் ஆப் அல்லது ATVM (தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள்) மூலம் டிக்கெட் எடுத்தால் 3% கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, R-Wallet ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்ட 3% சலுகை, இப்போது டிக்கெட் எடுக்கும்போது வழங்கப்படுகிறது.
டிக்கெட் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க, ஆப் மூலம் எளிதில் டிக்கெட் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
UTS மொபைல் செயலியில் உள்ள R-Wallet அல்லது ATVM மூலம் டிக்கெட் வாங்குவோரை ஊக்குவிக்கும் விதமாக சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
#UTS mobile app #Trains tickets #Casfback offer #Tamilpublicnews






Comments