top of page

வன்னியர் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி 24-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் ராமதாஸ்

  • வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததன் 1000-ம் நாள் வருகிற 24-ந் தேதி வருகிறது.

  • காஞ்சிபுரம் நகரில் நடைபெறும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்று நடத்துவார்.

PMK   Ramdoss  Vaniyar Seat Allotment
PMK Ramdoss Vaniyar Seat Allotment

சென்னை:

  • பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  • வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததன் 1000-ம் நாள் வருகிற 24-ந் தேதி வருகிறது. அன்று தான் சமூகநீதிக்காக குரல் கொடுத்த தந்தைப் பெரியாரின் நினைவு நாள். அந்த நாளில், அதாவது வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், வட்டத் தலைநகரங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

  • தந்தைப் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் நாள் வன்னிய மக்கள் தொடங்கிய போராட்டத்தால் 21 இன்னுயிர்களை இழந்தாலும் கூட, 20 சதவீத இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துக் கொடுத்தது. இப்போது அவரது நினைவு நாளில் தொடங்கும் அடுத்தக்கட்ட போராட்டமும் வெற்றியில் தான் முடியும்; வன்னியர் சமூகத்திற்கு சமூகநீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையும், உறுதியும் எனக்கு அதிகமாகவே இருக்கின்றன.

  • காஞ்சிபுரம் நகரில் நடைபெறும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்று நடத்துவார். மற்ற இடங்களில் நடைபெறும் இந்த போராட்டங்களை பா.ம.க.வின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமையேற்று நடத்துவர். தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக நடைபெறும் இந்தப் போராட்டங்களில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

#PMK #Ramdoss #Vaniyar Seat Allotment

Comments


bottom of page