19-வயதுக்கு உட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு
- tamil public
- Dec 24, 2024
- 1 min read
இந்திய அணியின் கேப்டனாக நிக்கி பிரசாத்தும் துணை கேப்டனாக சானிகா சால்கேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அணியில் கமலினி ஜி மற்றும் பவிகா அஹிரே ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்கள் உள்ளனர்.

ஐசிசியின் 19-வயதுக்கு உட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பை தொடர் மலேசியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடர் ஜனவரி 18-ந் தேதி முதல் பிப்ரவரி 2-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 16 அணிகள் பங்கேற்கின்றனர். இந்த 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சாம்பியனான இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, மலேசியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகள் உள்ளன.
இந்நிலையில் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி இந்திய அணியின் கேப்டனாக நிக்கி பிரசாத்தும் துணை கேப்டனாக சானிகா சால்கேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அணியில் கமலினி ஜி மற்றும் பவிகா அஹிரே ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்கள் உள்ளனர், அதே நேரத்தில் நந்தனா எஸ், ஐரா ஜே மற்றும் அனாதி டி ஆகிய மூன்று காத்திருப்பு வீரர்களாக உள்ளனர்.
#Womens cricket #ICC #Tamilpublicnews
Comments