top of page

2009-இல் நடந்த விபரீதம் சோதனை செய்வதற்கான ஆய்வுக்கூடம் இந்தியா - பில் கேட்ஸ் கருத்தால் சர்ச்சை

  • 4,000 இந்திய பழங்குடியின பள்ளி மாணவிகளிடையே நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விபரீதத்தில் முடிந்தது

  • விழிப்புணர்ச்சி இல்லாததால் ஆராய்ச்சிக்குப் பழங்குடியினர் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

Bill Gates  India  Tribals
Bill Gates India Tribals

ஆய்வுகூடமான இந்தியா

  • இந்தியா புதிய விஷயங்களைச் சோதனை செய்வதற்கான ஆய்வுக்கூடம் என உலகப் பணக்காரர் பில் கேட்ஸ் கூறியுள்ள கருத்துக்கு கண்டங்கள் எழுந்துள்ளது. வேலை தேடும் தளமான லிங்க்ட்இன் தளத்தின் இணை நிறுவனர் ரீட் ஹாஃப்மேன் உடன் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் போட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

  • அப்போது பேசிய அவர், இந்தியாவில் கடினமான விஷயங்கள் ஏராளமாக உள்ளன. உடல்நலம், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவை மேம்பட்டு வருகின்றன, மேலும் அவை போதுமான அளவு நிலையான வருவாய் உருவாகி வருகிறது.

  • இன்னும் 20 வருடங்கள் கழித்து அங்குள்ள மக்கள் வியத்தகு முறையில் முன்னேறி இருப்பார்கள். எனவே இந்தியா [புதிய] விஷயங்களை முயற்சி செய்து பார்க்கும் ஆய்வுக்கூடம் போன்றது. அங்கு நிரூபனம் ஆன பிறகு அவற்றை [திட்டங்களை] இடங்களுக்கு[ நாடுகளுக்கு] எடுத்துச் செல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.

சோதனை எலிகளான பழங்குடியின மாணவிகள்

  • முன்னதாக பில் கேட்ஸ் தனது மனைவி பெயரில் நடத்தும் தொண்டு நிறுவனமான மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன்14,000 இந்திய பழங்குடியின பள்ளி மாணவிகளிடையே நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விபரீத முடிவுகளைசுட்டிக்காட்டி பலர் பில் கேட்ஸ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  • மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன் இயங்கும் PATH (Programme for Appropriate Technology in Health) என்ற அரசு சாரா நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் [ ICMR] உடன் இணைத்து தெலுங்கானா மற்றும் குஜராத் வதோதரா பகுதிகளில் உள்ள 14,000 பழங்குடியின மாணவிகளுக்குப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்டு அதன் விளைவுகள் பரிசோதிக்கப்பட்டது.

  • இந்த சோதனை தொடங்கி சில மாதங்களுக்குப் பிறகு, பல மாணவிகளுக்குக் கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டது. 7 பழங்குடியின மாணவிகள் சோதனை தடுப்பூசி விளைவுகளால் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் அவர்களின் இறப்புக்கான காரணம் தொற்று பாதிப்பு, தற்கொலை என வேறு விதமாக விளக்கம் அளிக்கப்பட்டது.

விழிப்புணர்ச்சி

  • விசாரணையின்மூலம் ஆராய்ச்சியில் நடந்த விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. சுகாதார முன்னெடுப்பு என கூறி இந்த சோதனைகள் நடத்தப்பட்டது என்றும் சம்மத படிவத்தில் பழங்குடியின மாணவிகளின் பெற்றோருக்குப் பதில் அவர்கள் தங்கிப் படித்து வந்த விடுதி காப்பாளர்கள் கையெழுத்திட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதிக விழிப்புணர்ச்சி இல்லாததால் ஆராய்ச்சிக்குப் பழங்குடியின சிறுமிகள் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்கின் டாக்டர்

  • 2009 தடுப்பூசி சோதனைகள், வெளிநாட்டு நிதியுதவியுடன் நிறுவனங்களால் இந்தியாவும் பிற வளரும் நாடுகளும் எவ்வாறு சோதனைக் களமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு எச்சரிக்கை மணியாக அமைந்தது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 'ஸ்கின் டாக்டர்' என்ற விமர்சகர், நிதியுதவி பெறும் எத்தனை என்ஜிஓக்கள் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இதேபோன்ற சோதனைகளை நடத்துகிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்?

  • எங்களை வெளிப்படையாகக் கினிப் பன்றிகளாக நடத்தும் அதே வேளையில், எங்கள் ஆட்சியாளர்களை அவர்கள் எவ்வளவு எளிதாக அணுகுகிறார்கள் என்பது கவலை அளிக்கிறது என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

  • கடந்த மார்ச் மாதம் முகேஷ் அம்பானி மகன் திருமணத்துக்காக இந்தியா வந்த பில் கேட்ஸ் பிரதமர் மோடியை சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.

Comments


bottom of page