37-வது நினைவு நாள் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை
- tamil public
- Dec 24, 2024
- 1 min read
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 37-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவுநாளான இன்று சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
#Edappadi palaniswamy #MGR #ADMK #Tamilpublicnews






Comments