3வது போட்டியில் வெற்றி: ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்
- tamil public
- Dec 22, 2024
- 1 min read
முதலில் ஆடிய ஜிம்பாப்வே 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 131 ரன்கள் எடுத்து வென்றது.

புலவாயோ:
ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் இரு ஆட்டங்கள் முடிந்த நிலையில் 1-0 என ஆப்கானிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி ஆப்கானிஸ்தான் அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில், ஜிம்பாப்வே அணி 30.1 ஓவரில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சீன் வில்லியம்ஸ் 60 ரன்கள் எடுத்தார்.
ஆப்கானிஸ்தான் சார்பில் கசன்பர் 5 விக்கெட்டும், ரஷித் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர் .
இதையடுத்து, 128 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 26.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருது கசன்பருக்கும், தொடர் நாயகன் விருது செதிகுல்லா அடலுக்கும் வழங்கப்பட்டது.
#ZIM VS ASG #Tamilpublicnews
Comments