4 ஆண்டுகளில் பறிமுதல் செய்த ரூ.3.50 கோடி போதைப்பொருட்களை தீ வைத்து அழித்த போலீசார்
- tamil public
- Dec 27, 2024
- 1 min read
போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் இருப்பு வைத்திருந்தனர்.
பல்லடம் போலீஸ் நிலையம் மூலம் ரூ.3.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை போலீசார் தீ வைத்து அழித்தனர்.

பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கடைகள், குடோன்கள் உள்பட பல்வேறு இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி பதுக்கி வைக்கப்படும் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
மேலும் வாகன சோதனை நடத்தி வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் இருப்பு வைத்திருந்தனர். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பல்லடம் போலீஸ் நிலையம் மூலம் ரூ.3.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை போலீசார் தீ வைத்து அழித்தனர்.
#Palladam #Fire accident #Drugs #Tamilpublicnews






Comments