top of page

2024 ரீவைண்ட் டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் ஓய்வு

  • பிரெஞ்ச் ஓபனை மட்டும் 14 முறை வென்றுள்ளார்.

  • அனைத்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் தலா இரண்டு முறை வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

Tennis    Rafael nadal
Tennis Rafael nadal
  • டென்னிஸ் விளையாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் தலைசிறந்த வீரராக கருதப்படும் மூன்று வீரர்களில் ஒருவராக ரபேல் நடால் திகழ்ந்தார். பெடரர் மற்றும் ஜோகோவிச் ஆகியோருடன் இணைந்து தலைசிறந்த வீரராக பார்க்கப்படுகிறார்.

கிராண்ட்ஸ்லாம்

  • இடது கை பழக்கம் கொண்ட நடால் ஏடிபி தரவரிசையில் 209 வாரங்கள் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தவர். ஐந்து முறை முதல் இடத்தை வகித்துள்ளார். 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர். குறிப்பாக பிரெஞ்ச் ஓபனை மட்டும் 14 முறை வென்றுள்ளார்.

  • கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை அதிகமுறை வென்றவராக இருந்த பெடரர் (20) சாதனையை முறியடித்தார். தற்போது ஜோகோவிச் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். நடால் 22 கிராண்ட்ஸ்லாம் இடங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

  • கடந்த 2010-ல் பிரெஞ்ச ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய மூன்றையும் தனது 24 வயதில் வென்றார். 2008-ல் சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வென்றார். 24 வயதில் (மிகவும் இளம் வயதில்) மூன்று மாறுபட்ட மைதானங்களில் (Courts) சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றார்.

  • 2005-ல் பிரெஞ்ச் ஓபனை வென்று சாதனைப் படைத்தார். 2022-ல் ஆஸ்திரேலிய ஓபனை வென்றதன் மூலம் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை தலா இரண்டு முறை வென்ற வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.

  • ஐந்து செட்களை கொண்ட 391 போட்டிகளில் 345 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். சராசரி 88.23 சதவீதம் ஆகும்.

ஒற்றையர் சாம்பியன் பட்டம்

  • ஏடிபி ஒற்றையர் பிரிவில் 36 மாஸ்டர்ஸ் டைட்டில், ஒலிம்பிக் மெடல் உள்பட 92 பதக்கங்கள் வென்றுள்ளார். இதில் 63 டைட்டில் Clay Courts-ல் வென்றதாகும். செம்மண் தரையில் (Clay Courts) முடிசூடா மன்னனாக திகழ்ந்தார்.

  • 20 வருடங்கள் டென்னிசில் சிறந்த வீரராக திகழ்ந்தார். 20 வயதிற்குள் தரவரிசையில் 2-வது இடம் மற்றும் 16 ஏடிபி டூர் டைட்டில் வென்று அசத்தியவர்.

ஆஸ்திரேலிய ஓபன்

ஆஸ்திரேலிய ஓபனை 2009 மற்றும் 2022 ஆகிய இரண்டு முறை வென்றுள்ளார்.

 பிரெஞ்ச் ஓபன்

  • பிரெஞ்ச் ஓபனை 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019, 2020, 2022 ஆகிய 14 முறை வென்றுள்ளார். இதில் இரண்டு முறை தொடர்ந்து 4 முறையும், ஒரு முறை தொடர்ந்து ஐந்து முறையும் வென்றுள்ளார்.

  •  பிரெஞ்ச் ஓபனில் மூன்று முறை (2012, 2014, 2022) ஜோகோவிச்சை வீழ்த்தியுள்ளார். 2006 முதல் 2008 வரை தொடர்ந்து மூன்று முறை ரோஜர் பெடரரை வீழ்த்தியுள்ளார். 2011-ம் ஆண்டும் ரோஜர் பெடரரை வீழ்த்தியுள்ளார்.

விம்பிள்டன்

  • விம்பிள்டன் ஓபனை 2008 மற்றும் 2010 ஆகிய இரண்டு முறை வென்றுள்ளார்.

 அமெரிக்க ஓபன்

  • அமெரிக்க ஓபனை 2010, 2013, 2017 மற்றும் 2019 என நான்கு முறை வென்றுள்ளார்.

 ஓய்வு அறிவிப்பு

  • 38 வயதாகிய ரபேல் நடால் இந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற டேவிஸ் கோப்பை காலிறுதி போட்டியுடன் ஓய்வு பெற்றார். தனது கடைசி போட்டியில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

  • 2004, 2008, 2009, 2011, 2019 ஆகிய டேவிஸ் கோப்பையை ஸ்பெயின் அணிக்காக வென்றுள்ளார். ஆனால் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இரட்டை பிரிவில் ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வென்றது கிடையாது.




Comments


bottom of page