top of page

அடிலெய்டு டெஸ்டில் லபுசேன், டிராவிஸ் ஹெட் அரைசதம் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா

  • லபுசேன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

  • டிராவிஸ் ஹெட் 53 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

Labuschagne    Austria
Labuschagne Austria
  • இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 180 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் சாய்த்தார்.

  • பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்திருந்தது. லபுசேன் 20 ரன்னுடனும், மெக்ஸ்வீனி 38 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

  • இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மெக்ஸ்வீனி 39 ரன்னில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்மித்தை 2 ரன்னில் வெளியேற்றினார் பும்ரா. இதனால் 103 ரன்னுக்குள் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டை இழந்தது.

  • 4-வது விக்கெட்டுக்கு லபுசேன் உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. லபுசேன் 114 பந்தில் அரைசதம் அடித்தார். டிராவிஸ் ஹெட் 63 பந்தில் அரைசதம் விளாசினார்.

  • ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 168 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. லபுசேன் 64 ரன் எடுத்த நிலையில் நிதிஷ் ரெட்டி பந்தில் ஆட்டமிழந்தார்.

  • அடுத்து டிராவிஸ் ஹெட் உடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். ஆஸ்திரேலியா 2-வது நாள் டின்னர் இடைவேளை வரை 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிட் ஹெட் 53 ரன்னுடனும், மார்ஷ் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

  • தற்போது வரை ஆஸ்திரேலியா 11 ரன்னில் முன்னிலை பெற்றுள்ளது. 100 ரன்கள் வரை முன்னிலை பெற்றால் அது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாகும். இதனால் போட்டி மெதுமெதுவாக இந்தியாவிடம் இருந்து கை நழுவிச் செல்கிறது.

Comments


bottom of page