அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை இன்றைய நிலவரம்
- tamil public
- Dec 11, 2024
- 1 min read
நேற்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,640 விற்பனையானது.
வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. இதனை தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்தும் நேற்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,640 விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 58,280-க்கும் கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,285-க்கும் விற்பனையாகிறது.
இதனால் இந்த 3நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று கிராமுக்கு ரூ.4 உயர்ந்து விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 103 ரூபாய்க்கும், கிலோவுக்கு ரூ. 3000 குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து மூவாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
#Today Gold Price
Comments