அரையாண்டு தேர்வை நாளை நடத்த வேண்டும்- பள்ளிகளுக்கு அரசு உத்தரவு
- tamil public
- Dec 20, 2024
- 1 min read
தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இருந்து வந்தது.
தொடக்கக்கல்வித் துறை அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சென்னை:
பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அரையாண்டு தேர்வு கடந்த 9-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இடையில் ஃபெஞ்சல் புயல் மழையால் கடந்த 12-ந்தேதி சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
அந்த நாளில் 6-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆங்கிலத் தேர்வும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கு சில பாடங்களுக்கான தேர்வும் நடத்த முடியாமல் போனது.
அந்த தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்த நிலையில் அதுதொடர்பான அறிவிப்பை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொடக்கக்கல்வித் துறை அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கடந்த 12-ந்தேதி கனமழையால் விடுமுறை விடப்பட்டு நடத்த முடியாமல் போன அரையாண்டு தேர்வை நாளை (சனிக்கிழமை) நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6, 7, 8-ம் வகுப்புகளுக்கு மட்டும் சுற்றறிக்கை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், பிற வகுப்புகளுக்கும் வாய்மொழி வாயிலாக உத்தரவு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Halfyearly exam #Fenjal #Rain Flood #Tamilpublinews






Comments