ஆர்டர்லி முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- tamil public
- Nov 29, 2024
- 1 min read
சிறை வார்டன் மற்றும் காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரித்து அறிக்கை.
வழக்கின் மீதான விசாரணை வரும் டிசம்பர் 20ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்
Chennai Highcourt புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனக்கூறி சுஜாதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் வந்தது.
அப்போது மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறை வார்டன் மற்றும் காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சிறைக்காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறைத்துறை டிஜிபி உறுதி அளித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் டிசம்பர் 20ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
#Chennai Highcourt
Comments