ஆறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
- tamil public
- Dec 18, 2024
- 1 min read
தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
கன முதல் மிக கனமழை பெய்யும்.

வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவ காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது, அடுத்த இரு தினங்கள் (இன்று, நாளை) மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதனால் வடகடலோர தமிழ்கத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
#Chennai rain #Rain alert #Tamilpublicnews
Comments