இந்து அமைப்புகளின் கலந்தாய்வு கூட்டம்- அண்ணாமலை பங்கேற்பு
- tamil public
- Dec 7, 2024
- 1 min read
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட இந்த அமைப்புகளின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டம் நாளை மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

ஈரோடு:
ஈரோடு வேப்பம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இந்து அமைப்புகள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் இன்று காலை தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட இந்த அமைப்புகளின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் வட தமிழக ஆர்.எஸ்.எஸ். செயலாளர் ஜெகதீசன், இந்து முன்னணி காடேஸ்வர் சுப்பிரமணி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.
இன்றும், நாளையும் என 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்து அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் தலைமை பண்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
#Hindu Organisation #Annamalai
Comments