இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு கேல் ரத்னா விருது வழங்க வேண்டும்-விஜய்வசந்த்
- tamil public
- Dec 21, 2024
- 1 min read
அஸ்வின் என்ற மந்திரச் சொல் எதிரணிகளை நிலை குலைய செய்துள்ளது.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்ற செய்தி அதிர்ச்சி அளித்தது.

நாகர்கோவில்:
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது சாதனைகளை பாராட்டும் வண்ணம் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதினை வழங்க வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2010 ஆண்டு முதல் கடந்த 14 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரராக விளங்கி வருகிறார் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட், ஒரு நாள், 20-20 என அனைத்து போட்டிகளிலும் இந்தியாவிற்கு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையான பேட்டிங் வாயிலாகவும் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்துள்ளார்.
அஸ்வின் என்ற மந்திரச் சொல் எதிரணிகளை நிலை குலைய செய்து இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளது. பல சாதனைகளை படைத்த நம்ம சென்னையை சேர்ந்த அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்ற செய்தி அதிர்ச்சி அளித்தது.
இவ்வளவு திறமை வாய்ந்த வீரர் தனது புகழின் உச்சியில் ஓய்வை அறிவித்தது ஏற்க முடியாத ஒன்றாக உள்ளது. சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாட உள்ளார்.
இத்தகைய சிறந்த வீரருக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதினை மத்திய அரசு வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
#Ashwin #Vijay vasanth MP #Tamilpublicnews






Comments