இந்தியா நோக்கி ஒரு வாசல் பாகிஸ்தான் நோக்கி மறு வாசல் எல்லையில் மைதானம் கட்டணும் - அகமது ஐடியா
- tamil public
- Dec 21, 2024
- 1 min read
பாகிஸ்தானில் 2025 இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பாதுகாப்பு காரணமாக இந்திய வீரர்களை அனுப்ப மறுப்பு கூறப்பட்டது.
இரு அணிகளும் அரசியல் பதட்டங்கள் இல்லாமல் அந்தந்த நாடுகளில் இருந்து நுழைய முடியும் என்று தெரிவித்துள்ளார்

பாகிஸ்தான் - இந்தியா அரசியல் பிரச்சனை கிரிக்கெட் விளையாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.பாகிஸ்தானில் 2025 இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பாதுகாப்பு காரணமாக இந்திய வீரர்களை அனுப்ப மறுப்பு கூறப்பட்டது.
இதற்கு உபாயமாக ஐசிசி ஹைபிரிட் மாடலை பரிந்துரைத்து வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனைக்குப் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் அகமது செசாத், ஒரு புதிய தீர்வை முன்மொழிந்துள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் சொந்த மைதானத்தில் எவ்வாறு விளையாடலாம் என்று ஒரு வினோதமான ஆலோசனையை அவர் வழங்கியுள்ளார்.
யூடியூபில் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அகமது செசாத், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையில் ஒரு மைதானம் கட்டப்பட வேண்டும்.
ஒரு வாயில் இந்தியாவை நோக்கியும், மற்றொரு வாயில் பாகிஸ்தானை நோக்கியும் இருக்கும். வீரர்கள் அந்தந்த வாயில்களில் இருந்து வந்து விளையாடுவார்கள். இதனால் இரு அணிகளும் அரசியல் பதட்டங்கள் இல்லாமல் அந்தந்த நாடுகளில் இருந்து நுழைய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் பிசிசிஐக்கும் அவர்களின் அரசாங்கத்திற்கும் பிரச்சினைகள் இருக்கும். அவர்களின் வீரர்கள் எங்கள் பக்கத்தில் மைதானத்திற்கு வரும்போது, அவர்களுக்கு விசா தேவைப்படும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையே ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்கான நடுநிலைமையான இடத்தை ஐசிசி இன்னும் அறிவிக்கவில்லை, ஆனால் அது இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Champions trophy #ICC #BCCI #Pakistan #Tamilpublicnews
Comments