இன்று 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- மக்களே உஷார்
- tamil public
- Dec 2, 2024
- 1 min read
5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் குறைந்த பட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகும்.
#Fenjal #Northeast Monsoon






Comments