இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கி சரிவை சந்தித்த சென்செக்ஸ், நிஃப்டி
- tamil public
- Nov 29, 2024
- 1 min read
சென்செக்ஸ் 305.62 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.
நிஃப்டி 31.65 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.

பங்குச் சந்தை இன்று காலை 9.15 மணிக்கு தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை நிஃப்டி ஆகியவை உயர்வுடன் வர்த்தகமானது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 80,109.85 புள்ளிகளுடன் நேற்று வர்த்தகம் முடிவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 305.62 புள்ளிகள் உயர்ந்து 80,415.47 புள்ளிகள் வர்த்தகம் தொடங்கியது.
காலை 10.20 வரையில் வர்த்தமாக அதிகபட்சமாக சென்செக்ஸ் 80,482.36 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக சென்செக்ஸ் 79,912.57 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.
அதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 31.65 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமானது. நேற்று நிஃப்டி 24,221.90 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 24,253.55 புள்ளிகள் வர்த்தகம் தொடங்கியது.
இன்று காலை 10.20 வரையில் அதிகபட்சமாக நிஃப்டி 24,361.55 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக நிஃப்டி 21,160.24 புள்ளிகளும் வர்த்தகமானது
#Share Market#NIFTY.






Comments