top of page

இன்றைய தங்கம் விலை நிலவரம்

  • தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.56,920-க்கு விற்பனையானது.

  • வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

Today Gold Price
Today Gold Price

சென்னை:

  • சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த 2-ந்தேதி தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்தும், 3-ந்தேதி சவரனுக்கு ரூ.320 உயர்ந்தும், 4-ந்தேதி விலை மாற்றமின்றியும், 5-ந்தேதி சவரனுக்கு ரூ.80 உயர்ந்தும், நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.56,920-க்கு விற்பனையானது.

  • இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ. 7,115-க்கும் சவரன் ரூ.56,920-க்கும் விற்பனையாகிறது.

  • வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

#Today Gold Price

Comments


bottom of page