இறுதி செய்யப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி ஹைபிரிட் மாடல் இந்திய அணி இழப்பது என்னென்ன?
- tamil public
- Dec 6, 2024
- 1 min read
இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவிப்பதால் பொதுவான இடத்தில் போட்டியை நடத்த திட்டம்.
இந்தியா விளையாடும் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. நாங்கள் பாகிஸ்தான் சென்று விளையாடமாட்டோம் என இந்திய அணி (பிசிசி) தெரிவித்தது.
இதனால் போட்டியை ஹைபிரிட் மாடல் (பாகிஸ்தான் மற்றும் மற்றொரு நாடு) என்ற வகையில் நடத்த ஐசிசி விரும்பியது. ஆனால் பாகிஸ்தான் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தையின் போது ஹைபிரிட் மாடலுக்கு நாங்கள் சம்மதம். அதேபோல் இந்தியாவில் 2031 வரை நடைபெறும் ஐசிசி தொடர்களும் ஹைபிரிட் மாடலாக நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது.
இதை பிசிசிஐ ஏற்கவில்லை. நேற்று ஐசிசி தலைவர் ஜெய் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் போர்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இதில் பாகிஸ்தான் ஹைபிரிட் மாடலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இறுதி அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதனைத் தொடர்ந்து போட்டி அட்டவணை வெளியாகும். பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஆகிய நாடுகளில் போட்டி நடத்தப்படுகிறது. இந்தியா விளையாடும் போட்டிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்.
அதேவேளையில் 2027 வரை இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐசிசி தொடர்கள் ஹைபிரிட் மாடலாக நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த காலக்கட்டத்தில் இந்தியா பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை நடத்த இருக்கிறது. 2026 டி20 உலகக் கோப்பை (ஆண்கள்) இலங்கையுடன் சேர்ந்து நடத்துகிறது.
பெண்கள் போட்டிகள் ஹைபிரிட் மாடலாக நடத்தப்பட வேண்டும். 2026 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடத்தப்படும். ஒருவேளை அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதிப் பெற்றால் இந்த போட்டிகளும் இலங்கையில் நடத்தப்படும்.
கிரிக்கெட் வெற்றி பெற வேண்டும், அது மிக முக்கியமானது. ஆனால் அனைவருக்குமான மரியாதையுடன் இருக்க வேண்டும். கிரிக்கெட்டுக்கு சிறந்ததைச் செய்வோம். நாம் எந்த வடிவிலான கிரிக்கெட்டிற்கு சென்றாலும், அது சமமானதாக இருக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் நக்வி தெரிவித்துள்ளார்.
#Champions Trophy #PCB #BCCI #ICC






Comments