இளம் செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு ரூ. 5 கோடி பரிசு தமிழக அரசு
- tamil public
- Dec 13, 2024
- 1 min read
குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார்.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை குகேஷ் வென்றார்.

18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று குகேஷ் சாதனைப் படைத்துள்ளார். 14 மற்றும் கடைசி சுற்று போட்டியில் சீனாவை சேர்ந்த டிங் லிரெனை எதிர்கொண்ட இந்திய வீரர் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இந்தப் போட்டியில் 58வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிங் லிரென் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
இதன் மூலம் இறுதிப் போட்டியில் வென்றதோடு, உலகின் செஸ் சாம்பியன் பட்டத்தை குகேஷ் வென்றார். இதனை சர்வதேச செஸ் கூட்டமைப்பு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. இதைத் தொடர்ந்து செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு தமிழக அரசு ரூ. 5 கோடி பரிசுத் தொகைஅறிவித்துள்ளது.
#World chess championship #Gukesh #Tamilnadu






Comments