top of page

ஈரோட்டில் விரைவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  • பவானி சாகரில் ஐயா ஈஸ்வரன் நினைவு அரங்கம் திறக்கப்பட்டுள்ளது.

  • திருப்பூர் குமரன் நினைவை போற்றும் வகையில் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும்.

MK Stalin
MK Stalin

ஈரோடு:

  • ஈரோட்டில் ரூ.951 கோடி மதிப்பில் 559 முடிவுற்ற திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

  • ஈரோடு தமிழகத்தில் புதிய வரலாற்றிற்கான தொடக்கம். வளர்ச்சி நிறைந்த தமிழகத்திற்கு காரணமான பெரியார், அண்ணா, கலைஞரை தந்த மண் ஈரோடு. வைக்கம் போராட்டத்தில் பெரியார் போட்ட அடித்தளத்தால் கேரள மக்கள் தமிழகத்தை பாராட்டுகின்றனர்.

  • ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நம்மை விட்டு பிரிந்த சோகம் எனக்குள் இருக்கிறது. தந்தை பெரியாரின் பேரசன் இளங்கோவனின் இழப்பு தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய இழப்பு.

  • பரபரப்பு, ஆர்ப்பாட்டம் இல்லாமல் நினைத்த செயலை வெற்றிகரமாக நிகழ்த்தக் கூடியவர் அமைச்சர் முத்துசாமி.

  • ஈரோடு மாவட்டத்திற்கு தமிழக அரசு செய்துள்ள பணிகள் மிக பெரியது. அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி வைத்தோம்.

  • தந்தை பெரியார் மருத்துவமனையில் பல்நோக்கு மலுத்துவமனை கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் விரைவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளது.

  • பவானி சாகரில் ஐயா ஈஸ்வரன் நினைவு அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர் குமரன் நினைவை போற்றும் வகையில் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும்.

    #MK Stalin #Tamilppublicnews

Comments


bottom of page