உலக செஸ் சாம்பியன் குகேஷூக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
- tamil public
- Dec 16, 2024
- 1 min read
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இளம் வயதில் உலக சாம்பியன் ஆன வீரர் என்ற வரலாற்று சாதனையையும் இவர் படைத்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இளம் வயதில் உலக சாம்பியன் ஆன வீரர் என்ற வரலாற்று சாதனையையும் இவர் படைத்தார்.
இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் இன்று தாயகம் திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை தரப்பிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, உலக செஸ் சாம்பியன் குகேஷை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசு சார்பாக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், குகேஷ் ஆகியோர் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
நாளை தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. நாளை மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
#World chess championship #D. Gukesh #Tamilpublicnews






Comments