top of page

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்-க்கு விஜய் வசந்த் வாழ்த்து

  • குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார்.

  • உலக செஸ் சாம்பியன் பட்டத்தை குகேஷ் வென்றார்.

World chess championship    Gukesh
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்-க்கு விஜய் வசந்த் வாழ்த்து
  • 18 வயதில உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று குகேஷ் சாதனைப் படைத்துள்ளார். 14 மற்றும் கடைசி சுற்று போட்டியில் சீனாவை சேர்ந்த டிங் லிரெனை எதிர்கொண்ட இந்திய வீரர் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இந்தப் போட்டியில் 58வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிங் லிரென் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

  • இதன் மூலம் இறுதிப் போட்டியில் வென்றதோடு, உலகின் செஸ் சாம்பியன் பட்டத்தை குகேஷ் வென்றார். இதனை சர்வதேச செஸ் கூட்டமைப்பு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.

  • உலகின் இளம் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்-க்கு பிரதமர் மோடி துவங்கி பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  • இந்நிலையில் உலக செஸ் சாம்பியனாக வெற்றி பெற்ற இளம் தமிழக வீரர் குகேஷ்-க்கு ஒட்டுமொத்த இந்தியாவும் உங்கள் வெற்றியில் பெருமை கொள்கிறது என்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

#World chess championship #Gukesh



Comments


bottom of page