உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல் முன்னேற்றம் கண்ட நியூசிலாந்து
- tamil public
- Dec 18, 2024
- 1 min read
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

துபாய்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றியது.
இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டியில் அபாரமாக செயல்பட்ட நியூசிலாந்து 423 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து வெற்றி பெற்றதை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (63.33 சதவீதம்), ஆஸ்திரேலியா (60.71 சதவீதம்), இந்தியா (57.29 சதவீதம்) ஆகிய அணிகள் முதல் 3 இடங்களில் தொடர்கின்றன.
இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியின் மூலம் 6-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து (48.21 சதவீதம்) 4-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இலங்கை 5-ம் இடத்திலும், இங்கிலாந்து 6-ம் இடத்திலும் உள்ளன.
தொடர்ந்து 7 முதல் 9 இடங்களில் முறையே பாகிஸ்தான், வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உள்ளன.
#WTC points table #Newzealand #Tamilpublicnews
Comments