ஐகோர்ட்டு தடை விதித்தும் சின்ன உடைப்பு கிராமத்தில் 3-வது நாளாக போராட்டம்
- tamil public
- Dec 6, 2024
- 1 min read
189 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்.
கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டம்.

மதுரை:
மதுரை விமான நிலையம் 633.17 ஏக்கர் பரப்பளயில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக சின்ன உடைப்பு, பரம்புபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் சின்ன உடைப்பு கிராமத்தில் மட்டும் 146 நபர்களின் வீடுகள், நிலங்கள் என 189 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்தநிலையில் சின்ன உடைப்பு கிராம நிலம் கையப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தங்களை மீள்குடி அமர்த்தாமல் இங்கிருந்து வெளியேற்றக் கூடாது என நேற்று மதுரை ஐகோர்ட்டில் கிராம மக்கள் சார்பாக வழக்கு தொடர்ந்த நிலையில் சின்ன உடைப்பு பகுதியில் மீண்டும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுதொடர்பான வழக்கு நேற்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வருகிற 19-ந்தேதி வரை சின்ன உடைப்பு கிராம மக்களின் வீடுகளை அகற்ற எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவு எடுக்கப்பட்டு இன்று தொடர்ந்த சின்ன உடைப்பு கிராம மக்கள் மூன்றாவது நாளாக நீடிக்கிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.






Comments