ஒடிசாவில் காணப்படும் அரியவகை கருஞ்சிறுத்தைகள்- வீடியோ வைரல்
- tamil public
- Jan 4
- 1 min read
காடுகளுக்குள் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் இந்த வீடியோ பதிவாகி உள்ளது.
வனப்பகுதிக்குள் தொடர்ந்து ரோந்து பணி நடைபெற்று வருகிறது.

புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் நயாகர் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அரிய வகையான மெலனிஸ்டிக் இனத்தை சேர்ந்த கருஞ்சிறுத்தைகள் காணப்படுவதாக வன அதிகாரி ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
முதன்மை தலைமை வன பாதுகாவலரான பிரேம்குமார்ஜா என்பவர் பகிர்ந்துள்ள வீடியோவில், அரிய வகை கருஞ்சிறுத்தை ஒன்று குட்டியுடன் அடர்ந்த காடுகளில் செல்லும் காட்சிகள் உள்ளது.
காடுகளுக்குள் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் இந்த வீடியோ பதிவாகி உள்ளது. வீடியோவுடன் அவரது பதிவில், எங்கள் வனப்பிரிவில் அதிக எண்ணிக்கையில் சிறுத்தைகள் உள்ளன.
பாதுகாப்பு சட்டத்தின் காரணமாக மெலனிஸ்டிக் மற்றும் பிற சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வனப்பகுதிக்குள் தொடர்ந்து ரோந்து பணி நடைபெற்று வருகிறது.
இந்த வகை சிறுத்தைகள் பல்லுயிர் பெருக்கத்தை பிரதிபலிக்கிறது. இவை சுற்றுச்சுழலுக்கு இனியமையாதவை என பதிவிட்டுள்ளார்.
#Leopard #Social media #Tamilpublicnews
Comments