ஓய்வு அறிவித்த நாளில் அஸ்வினுக்கு போன் போட்ட பெரும் தலைகள்.. அவரே வெளியிட்ட ஸ்கிரீன்ஷாட்
- tamil public
- Dec 20, 2024
- 1 min read
போட்டி முடிந்ததும் ஓய்வு முடிவை அறிவித்து நாடு திரும்பினார்.
ஸ்கிரீன்ஷாட்டை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். ஆஸ்திரேலிய சுற்றுபயணத்தில் இடம்பெற்றிருந்த அவர் 3-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் ஓய்வு முடிவை அறிவித்து நாடு திரும்பினார்.
ஓய்வு அறிவித்த நிலையில் சக வீரர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் ரவிச்சந்திரன் அஸ்வினை டேக் செய்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பதில் அளித்து வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் ஓய்வு அறிவித்த நாளில் தனக்கு வந்த அழைப்புகள் குறித்த ஸ்கிரீன்ஷாட்டை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "என்னிடம் ஸ்மார்ட்போன் இருக்கும், ஒரு இந்திய கிரிக்கெட் வீரராக நான் ஓயவு பெறும் கடைசி நாளில் எனது கால் லாக் (Call Log) இப்படி இருக்கும் என்று 25 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது கூறி இருந்தால், என் இதயத்துடிப்பு கிட்டத்தட்ட நின்றிருக்கும். சச்சின் மற்றும் கபில் தேவ் ஆகியோருக்கு நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார்.
#Ravichandhran ashwin #Tamilpublicnews
Comments