குட்கா பதுக்கி விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
- tamil public
- Nov 24, 2024
- 1 min read
Updated: Nov 25, 2024
குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி விற்று வந்தது தெரிய வந்தது.
கைதானவர்களிடம் இருந்து ஏராளமான புகையிலை, குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

குட்கா ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். மண்ணூர் கிராமம் மாதா கோவில் தெரு பகுதியில் கடையில் சோதனை செய்தபோது அங்கு குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி விற்று வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து வியாபாரி மணியை போலீசார் கைது செய்தனர். இதேபோல் மண்ணூர் பகுதியில் தீபா என்பவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ஏராளமான புகையிலை, குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. தீபாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதானவர்களிடம் இருந்து ஏராளமான புகையிலை, குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
#குட்கா #கைது #tamilpublicnews






Comments