குடிநீரில் கழிவுநீர் கலப்பு 3 பேர் பலி- பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆய்வு
- tamil public
- Dec 5, 2024
- 1 min read
மாநகராட்சி குழாயில் வந்த குடிநீரை குடித்த 23 நபர்களுக்கு கடும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆறுதல் கூறினார்.

சென்னை தாம்பரம் 13-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
பல்லாவரம், ஆலந்தூர் பகுதிகளில் மாநகராட்சி குழாயில் வந்த குடிநீரை குடித்த 23 நபர்களுக்கு கடும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
23 பேர் உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பம்மல் பகுதியை சேர்ந்த திருவேதி (57), வரலட்சுமி 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆறுதல் கூறினார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் நேரில் பார்வையிட்டார். பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த பகுதியில் உடனடியாக மருத்துவ முகாம் அமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே 2 பேர் பலியான நிலையில் மோகனரங்கன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
#Drinking Water #Tha Mo Anbarasan






Comments