குன்னூர் விமான விபத்துக்கு விமானியின் தவறே காரணம் பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்
- tamil public
- Dec 20, 2024
- 1 min read
ஹெலிகாப்டரை மேக கூட்டத்தின் நடுவே செலுத்தினார்.
நிலைதடுமாறி நிலத்தில் விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியது.

குன்னூர்:
குன்னூரில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முன்னாள் முப்படை தளபதி பிபின்ராவத் உள்பட 14 பேர் பலியானார்கள்.
இந்த விபத்திற்கு மனிதப் பிழையே காரணம் என விமானப்படை அறிக்கை அளித்துள்ளது. இதுதொடர்பான தகவல்கள் பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் தாக்கலான பாதுகாப்புக்கான நிலைக்குழு அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
அதில் 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 34 விமானப்படை விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் விபத்தில் சிக்கி இறந்த ஹெலிகாப்டர் விபத்தும் அடங்கும்.
இந்த விபத்திற்கு விமானியின் தவறே காரணம். வானிலை மாற்றம் காரணமாக தடுமாறிய விமானி, ஹெலிகாப்டரை மேக கூட்டத்தின் நடுவே செலுத்தினார். பின்னர் நிலைதடுமாறி நிலத்தில் விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியது.
ஹெலிகாப்டரில் இருந்த ரிகார்டரில் பதிவான விபரங்களின் அடிப்படையிலேயே, பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதற்கு மனித பிழையே காரணம் என விமானப்படை அறிக்கை அளித்துள்ளது.
#Coonoor #AIr force #Air crash #Tamilpublicnews






Comments