top of page

கேரம் பந்தை வீசி விட்டீர்கள் ஓய்வு அறிவித்த அஷ்வினுக்கு பிரதமர் மோடி உருக்கமான கடிதம்

  • அடிலெய்டு டெஸ்ட் போட்டியே அஸ்வினின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது.

  • சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் எடுத்த 765 சர்வதேச விக்கெட்டுகளில் ஒவ்வொன்றும் சிறப்பானது.

AUS VS IND   PM Modi     Aswin
AUS VS IND PM Modi Aswin
  • இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதல் 3 போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

  • இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று டிராவில் முடிந்தது. இந்த தொடரில் அஸ்வின் 2-வது போட்டியில் மட்டுமே விளையாடினார். முதல் மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் அவர் இடம் பெறவில்லை. இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அடிலெய்டு டெஸ்ட் போட்டியே அஸ்வினின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது.

  • அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் இதுவரை 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக 765 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.

  • ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் அஷ்வினை பாராட்டி பிரதமர் மோடி அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

  • அக்கடிதத்தில் அஸ்வினின் ஓய்வு எதிர்பாராதது என்று கூறிய பிரதமர் மோடி"இன்னும் உங்களிடம் பல ஆப்-பிரேக்குகளை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், நீங்கள் ஒரு கேரம் பந்தை (ஓய்வு அறிவிப்பு) வீசினீர்கள்" என்று தெரிவித்தார்.

  • மேலும் அக்கடிதத்தில், "உங்களின் ஜெர்சி எண் 99 இழப்பை உணரவைக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் எடுத்த 765 சர்வதேச விக்கெட்டுகளில் ஒவ்வொன்றும் சிறப்பானது. டெஸ்ட் போட்டிகளில் அதிக தொடர் ஆட்டக்காரர் விருதுகளை நீங்கள் பெற்றுள்ளதன் மூலம் கடந்த பல ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் அணியின் வெற்றியில் உங்களது பங்களிப்பை உணர முடிகிறது.

  • 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் புகழ்பெற்ற போட்டியில் (இந்தியா - பாகிஸ்தான் போட்டி) ஒரு பந்தை அடிக்காமல் விட்டதற்காக நீங்கள் நினைவுகூரப்படும் வீரராக உள்ளீர்கள். அப்போது நீங்கள் அடித்த வெற்றிக்கான ஷாட் பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. அதற்கு முந்தைய பந்தை நீங்கள் அடிக்காமல் விட்டு அதை வைட் பந்தாக மாற்றியது உங்களின் விழிப்பான மனதை எங்களுக்கு காட்டியது" என்று தெரிவித்துள்ளார்.


Comments


bottom of page