top of page

கிறிஸ்துமஸ், புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஊட்டியில் சாக்லெட் திருவிழா

  • சாக்லெட்டுகளை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

  • 40 வகையான சாக்லெட் வகைகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ளது.

  Ooty    Chocolate
Ooty Chocolate

ஊட்டி:

  • ஹோம் மேட் எனப்படும் வீடுகளில் செய்யப்படும் சாக்லெட் என்றால் அனைவரின் நினைவிற்கு வருவது ஊட்டிதான். அதற்கான சீதோஷ்ண காலநிலை இங்கு நிலவுவதால் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் சாகுபடி செய்யப்படும் கோகோ பழங்களில் இருந்து சேகரிக்கப்படும் கோகோ விதைகள் வரவழைக்கபட்டு அரைத்து, அவற்றுடன் கோகோ பட்டர் மற்றும் கரும்பு சர்க்கரை சேர்த்து ஹோம் மேட் சாக்லெட் தயாரிக்கப்படுகிறது.

  • இந்த சாக்லெட்டுகளை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த நிலையில் ஊட்டியில் சாக்லெட் தயாரிப்பாளர்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சாக்லெட் திருவிழா நடத்தப்படுகிறது.

  • இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை வரவேற்கும் வகையில் 15 நாள் சாக்லெட் திருவிழா நேற்று தொடங்கியது. இதில் நீலகிரி மாவட்டத்தில் விளையும் மற்றும் உற்பத்தி செய்யக்கூடிய கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, தைம், யூகலிப்டஸ், ரோஸ்மேரி, ஊட்டி வர்க்கி, தேயிலைத்தூள், காபி போன்றவற்றை கொண்டு செய்யப்பட்ட 40 வகையான சாக்லெட் வகைகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ளது.

  • மேலும் மேனிகுயின் எனப்படும் பொம்மைகளும், பெண்கள் அணியும் ஆபரணங்களும் சாக்லெட் மூலம் தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    #Ooty #Chocolate #Tamilpublicnews

Comments


bottom of page