காலை உணவுத் திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்
- tamil public
- Dec 18, 2024
- 1 min read
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால் பள்ளிகளுக்கு குழந்தைகள் குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளது.
90 சதவிகிதத்திற்கும் மேலான குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரித்துள்ளது.

சென்னை:
காலை உணவுத் திட்டத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் காலை உணவுத் திட்டத்தை உலகமே பின்பற்றி வரும் நிலையில், மாநில திட்டக் குழு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால் பள்ளிகளுக்கு குழந்தைகள் குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளது என்றும், 90 சதவிகிதத்திற்கும் மேலான குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரித்துள்ளது" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சீரிய திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வரும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக நினைவு பரிசு வழங்கி, நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டோம் என தெரிவித்துள்ளார் .
#MK Stalin #Anbil mahesh poyyamozhi #Tamilpublicnews






Comments