கிளாசன் போராட்டம் வீண் 2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வென்றது பாகிஸ்தான்
- tamil public
- Dec 20, 2024
- 1 min read
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 329 ரன்கள் குவித்தது

கேப் டவுன்:
பாகிஸ்தான் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் நடந்து முடிந்துள்ள டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 49.5 ஓவரில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முகமது ரிஸ்வான் 80 ரன்னும், பாபர் அசாம் 73 ரன்னும், கம்ரான் குலாம் 63 ரன்னும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் மாகாபா 4 விக்கெட்டும், மார்கோ ஜேன்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. அந்த அணியின் ஹென்ரிச் கிளாசன் மட்டும் அதிரடியாக ஆடினார். அவர் 74 பந்தில் 4 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 97 ரன்கள் குவித்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 43.1 ஓவரில் 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-0 என கைப்பற்றியுள்ளது.
பாகிஸ்தான் சார்பில் ஷாஹின் அப்ரிடி 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும், அப்ரார் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
#SA VS PAK #Tamilpublicnews






Comments