கஜகஸ்தானில் நடந்த விமான விபத்திற்கு முன்பு விமானத்திற்குள் எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது
- tamil public
- Dec 26, 2024
- 1 min read
விமானம் கீழே விழுந்து வெடிக்கும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கஜகஸ்தான் விமான விபத்தில் இதுவரை 38 பேர் உயிரிழந்தனர

Kazakhstan Plane crash அக்டாவ் நகருக்கு அருகே 62 பயணிகள் 5 பணியாளர்களுடன் ரஷியா நோக்கி சென்றுகொண்டிருந்த அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் பயங்கர விபத்துகஅஜர்பைஜானில் உள்ள பாகுவிலிருந்து ரஷியாவின் க்ரோஸ்னிக்கு இன்று பறந்து கொண்டிருந்த விமானம் அடர் பனிமூட்டம் காரணமாக 3 இடங்களில் திருப்பிடிவப்பட்டு கடைசியாக கஜகஸ்தானின் மேற்கில் உள்ள கசக்ஹ்ச்டன் அக்டாவ் விமான நிலையத்துக்கு திசை மாற்றி விடப்பட்டது.
அதன்படி அக்டாவ் விமான நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அக்டாவ் விமான நிலையம் அருகே அந்த விமானம் விழுந்து வெடிக்கும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இதுவரை 38 பேர் உயிரிழந்த நிலையில் 29 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில், கஜகஸ்தானில் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்திற்கு முன்பாக, விமானத்திற்குள் எடுக்கப்பட்ட பரபரப்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பயணிகள் அனைவரும் ஆக்சிஜன் குழாய்களின் உதவியுடன் அமர்ந்துள்ளனர்.






Comments