கனவு நனவானது 10,279 கி.மீ. தொலைவு பயணம் செய்து விராட் கோலியை சந்தித்த ரசிகர்
- tamil public
- Dec 14, 2024
- 1 min read
ஆஸ்திரேலியா சென்ற ஷோபித் வீர்மணி, தனது ஆதர்ச நாயகனான விராட் கோலியைச் சந்தித்தார்.
அவருக்கு கோலி பற்றி எழுதிய புத்தகத்தை பரிசாக அளித்தார். இதனால் அந்த ரசிகரின் கனவு நனவானது.

பிரிஸ்பேன்:
இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படுபவர் விராட் கோலி. இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் ரசிகர்கள் நிறைந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் பகுதியை சேர்ந்தவர் ஷோபித் வீர்மணி. விராட் கோலியின் தீவிர ரசிகரான இவர், தி பிக்கஸ்ட் பேன் ஆப் விராட் கோலி என்ற ஆங்கில புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை விராட் கோலியிடம் நேரில் அளிக்க வேண்டும் என்பதே இவரது ஆசை.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணி பிரிஸ்பேன் வந்துள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா சென்ற ஷோபித் வீர்மணி, தனது ஆதர்ச நாயகனான விராட் கோலியைச் சந்தித்தார்.
இதுதொடர்பாக, ஷோபித் வீர்மணி இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், விராட் கோலியின் தீவிர ரசிகரின் கனவு நனவாகும் தருணம். அவர் 10,279 கிலோமீட்டர் பயணம் செய்து, விராட் கோலியைச் சந்தித்து அவருக்கு தனது புத்தகத்தைப் பரிசாக அளித்தார்.
விராட் கோலி பற்றிய புத்தகத்தை ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோருக்கும் அந்த ரசிகர் பரிசளித்தார் என பதிவிட்டுள்ளார்.
#Virat kohli #Tamilpublicnews






Comments