சாத்தனூர் அணை நீர் திறப்பு- முதலமைச்சர் விளக்கம்
- tamil public
- Dec 10, 2024
- 1 min read
அதிமுக ஆட்சியில் முன்னறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படும் புகாருக்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்தார்.

சாத்தனூர் அணை திறக்கப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
5 வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த பின்பு சாத்தனூர் அணையில் படிப்படியாக நீர் திறக்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் முன்னறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டதால் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
செம்பரம்பாக்கம் ஏரியை அரசு யாருக்கும் சொல்லாமல் திறந்துவிட்டது என இந்திய கணக்காய்வு அறிக்கை தெளிவுபடுத்தியது என்று அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படும் புகாருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்தார்.
பல்வேறு இடங்களில் பெய்த மழைநீர் உபரி அடையாற்றில் கலந்ததால் மட்டுமே வெள்ளம் ஏற்பட்டது என்று அவர் கூறினார்.
சாத்தனூர் அணை நீர் திறப்பு, செம்பரம்பாக்கம் அணை நீர் திறப்பு குறித்து முதலமைச்சருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் விவாதம் நடைபெற்றது.






Comments