சென்னை உள்பட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
- tamil public
- Dec 20, 2024
- 1 min read
ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

புதுச்சேரியின் கிழக்கே நிலைக் கொண்டியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்தது. இது இன்று (டிசம்பர் 20) வடக்கு திசையில், ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டி நகரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று (டிசம்பர் 20) முதல் டிசம்பர் 25ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
#Chennai Rains #Rain alert #Met update #Tamilpublicnews
Comments