சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
- tamil public
- Dec 24, 2024
- 1 min read
தென்தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் நேற்று லேசான மழை பொழிவு காணப்பட்டது.
தமிழகத்தின் வடகடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.

சென்னை:
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென்தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் நேற்று லேசான மழை பொழிவு காணப்பட்டது.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் இன்று நிலவும்.
இதன்காரணமாக, இன்று தமிழகத்தின் வடகடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், மற்ற பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
#Northeast monsoon #Rain #IMD #Tamilpublicnews






Comments